நமது பள்ளியில் தேர்ச்சி விளக்க நாள் மற்றும் தொழில் முனைவர் நாள் கடந்த 23 ஜுன் 2011 மிகச்சிறப்பாக நடந்தேறியது. தமிழ்மொழிக்கழக உறுப்பினர்கள் கடந்த காலங்களைப் போல் பாரம்பரிய உணவு சிறுகடை வியாபாரம் செய்தனர். தமிழ்மொழிக் கழகத்தினர் அதிக இலாபம் பெற்ற சிறுகடையாக தேர்வு பெற்று முதலாம் இடத்தை வாகை சூடினர். மேலும், சிறந்த விளம்பர சிறுகடையாக இரண்டாம் இடத்தையும் வாகை சூடினர்.