திங்கள், 17 அக்டோபர், 2011

Simposium Linguistik dan Kesusasteraan Tamil Anjuran bersama Fakulti Bahasa & Linguistik dan Per.Guru-Guru Kesusasteraan Tamil Malaysia 2011

தஞ்சை பல்கலைக்கழக பேராசிரியர்களுடன்
நண்பர்களுடன்
கடந்த 28 மே முதல்1 ஜுன் 2011 வரை, மலேசிய இலக்கிய ஆசிரியர் கழகத்தின் ஏற்பாட்டில் தமிழ்மொழி மொழியியல் புலம், மலாயாப் பல்கலைக்கழகமும் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை, தமிழ்க்கல்வித் துறை தமிழ்ப்பல்கலைக்கழகமும் (தஞ்சாவூர் தமிழ் நாடு )இணைந்து தமிழ் மொழியியல் & தமிழ் இலக்கிய ஆய்வரங்கம் ஒன்றை மிகச்சிறப்பாக நடத்தியது. இவ்வாய்வரங்கின் செயற்குழு உறுப்பினராகவும் பங்கேற்பாளராகவும் கலந்துகொண்டேன்.

Seminar Perdana SPM 2011 - Anjuran Per.Guru-Guru Bahasa Tamil SMK N.Johor.

               ஜோகூர் மாநில இடைநிலைப் பள்ளி தமிழாசிரியர் கழகத்தின் ஏற்பாட்டில், கடந்த 15 அக்டோபர் 2011 அன்று எஸ்.பி.எம் தேர்வு வழிகாட்டி கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சாஆ இடைநிலைப் பள்ளி மாணவர்களும் இக்கருத்தரங்கில் கலந்து பயன் பெற்றனர். மலாய் மொழி, ஆங்கிலம், வரலாறு, நன்னெறி ஆகிய பாடங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. அனுபவமிக்க ஆசிரியர்கள் இக்கருத்தரங்கினை வழிநடத்தினர். சாஆ இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கான போக்குவரத்து (பேருந்து) செலவை, ம.இ.கா லாபீஸ் தொகுதி தலைவர் திரு.ஜெயராமன் பி.ஐ.எஸ்.அவர்கள் ஏற்றுக் கொண்டார். ஜோகூர் மாநில இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை ஆட்சிக்குழு உறுப்பினரரும் மக்ஹோத்தா சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு துவான் ஹஜி முகமட் ஜைஸ் பின் சர்டாய் அவர்கள் அதிகாரப்பூர்வமாக  இந்நிகழ்ச்சியை நிறைவு செய்தார். காலை 8.00 மணிக்குத் தொடங்கிய இக்கருத்தரங்கு சுமார் மாலை மணி 5.00க்கு நிறைவை நாடியது.

திங்கள், 19 செப்டம்பர், 2011

"Benchmarking" ke Singapura - Umar Pulavar Tamil Language Centre, Ang Mo Kio Public Library & Singapore Tamil Teachers Union.


16 செப்டம்பர் 2011 அன்று, ஜோகூர் மாநில இடைநிலைப்பள்ளித் தமிழாசிரியர்கள் கழகத்தின் ஏற்பாட்டில் ஒரு நாள் சிங்கப்பூர் கற்றல் பயணம் மேற்கொண்டோம். இக்கற்றல் பயணத்தில் நாற்பது இடைநிலைப்பள்ளி தமிழாசிரியர்கள் கலந்து கொண்டனர். முதலாவதாக, உமறுப்புலவர் தமிழ்மொழி நிலயத்திற்குச் சென்றோம். அவர்களின் கனிவான வரவேற்பும் உபசரிப்பும் எங்களை மெய்சிலிர்க்க வைத்தது.உமறுப்புலவர் நிலையத்தின் மேற்பார்வையாளர் எஸ்.பி.ஜெயராஜதாஸ் பாண்டியன் அவர்களின் படச்சுருள் விளக்கம் நடைபெற்றது. தொடர்ந்து கலந்துரையாடலும் நிலையத்தின் பார்வையிடல் அங்கமும் இடம்பெற்றது. தமிழ்மொழியின் மேம்பாட்டிற்கு சிங்கை அரசு மேற்கொள்ளும் திட்டங்களும் பணிகளும் போற்றுதற்குரியவையாகும்.
                 தொடர்ந்து, அங் மோ கியோ பொது நூலகத்திற்குச் சென்றோம். அங்கு திருமதி. மீனாட்சி சபாபதி அவர்களைச் சந்தித்தோம். அவர்களுடன் கலந்த்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டோம். இறுதியாக, சிங்கை தமிழாசிரியர் சங்கத்தினருடன் கலந்துரையாடல் நடைப்பெற்றது. சங்கத்தின் தலைவர் திரு.சாமிக்கண்ணு அவர்களின் விளக்கவுரை இடம்பெற்றது.

இக்கற்றல் பயணம் ஜோகூர் மாநில இடைநிலைபபள்ளி தமிழாசிரியர்களிடையே பெரும் ஊக்கத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.






புதன், 14 செப்டம்பர், 2011

Bengkel Penataran Format Baru Mata Pelajaran Bahasa Tamil SPM 6354. Anjuran PPD Segamat.

கடந்த  8 செப்டம்பர் 2011 அன்று, அடுத்த ஆண்டுக்கான எஸ்.பி.எம் தமிழ்மொழி தாள் புதிய வடிவம் பற்றிய பயிலரங்கு நடைப்பெற்றது. சிகாமாட் மாவட்ட கல்வி அலுவலகத்தில் காலை 8.00 மணிக்குத் தொடங்கியது. இப்பயிலரங்கு சிகாமட் மாவட்ட மொழி அதிகாரி உயர்திரு சீ.கனகலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இப்பயிலரங்கில் 20 தமிழ்மொழி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் திரு.குணசேகரன் அவர்களின் இறைவணக்கத்தோடு  இப்பயிலரங்கு தொடங்கியது. தொடர்ந்து, சிகாமட் மாவட்ட தமிழ்மொழி பணித்தியத்தின் செயலர் ஆசிரியர் திரு.இரமணி தருமன் அவர்களின் வரவேற்புரையும் விளக்கமும் இடம்பெற்றது.  பிறகு, இப்பயிலரங்கு  ஆசிரியை திருமதி கண்ணியம்மாள் அவர்களால் வழிநடத்தப்பட்டது. குழுமுறையில் மாதிரி வினாத்தாள் ஒன்று உருவாக்கப்பட்டது. சுமார் மாலை 3.00 மணிக்கு மொழி அதிகாரி உயர்திரு சீ.கனகலிங்கம் அவர்களின் உரையோடு இப்பயிலரங்கு நிறைவை நாடியது.

செவ்வாய், 13 செப்டம்பர், 2011

Persidangan Kesusasteraan Tamil Malaysia - Singapura 2011 - Lotus Desaru Beach Resort


கடந்த 26 & 27 பிப்ரவரி மாதம் 2011 -ல், ஜோகூர் மாநில தமிழர் சங்கமும் சிங்கப்பூர் தமிழ் அமைப்புகளும் இணைந்து தமிழ் இலக்கிய மாநாட்டை மிகச்சிறப்பாக நடத்தியது. அதில் பேராளராகக் கலந்து கொண்டேன். இலக்கிய சுவை நிறைந்த இந்நிகழ்ச்சியில் தமிழ் இலக்கியம், வரலாறு, பண்பாடு, தமிழ்க்கல்வி, தமிழ்ப்பல்லூடகங்கள், இணைய பதிவாளர்கள் பற்றி பல்வேறு தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இரண்டு நாட்கள் இலக்கிய கடலில் மூழ்கியிருந்தோம். படைப்பாளர்கள், நண்பர்கள் பலரைச் சந்திக்கும் அரிய வாய்ப்பையும் இந்நிகழ்ச்சி ஏற்படுத்தித் தந்தது. இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஜோகூர் மாநில தமிழர் சங்கத்திற்கும் சிங்கை தமிழ் அமைப்புகளுக்கும் வாழ்த்துகள். 

வியாழன், 25 ஆகஸ்ட், 2011

Bengkel Penulisan Cerpen - Anjuran Persatuan Penulis-Penulis Tamil Malaysia

19,20,21 ஆகஸ்ட் 2011 ஆகிய நாட்களில், கிராண்ட் பசிபிக் தங்கும் விடுதியில் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறுகதை பயிலரங்கு மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மலேசிய தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகத்தின் பிரதிநிதிகளில் ஒருவராகக் கலந்து கொண்டேன். தமிழகத்தின் சிறந்த சிறுகதை எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன் அவர்கள் பயிலரங்கை வழிநடத்தினார்.இவரோடு, முனைவர் கார்த்திகேசு, முனைவர் முல்லை இராமையா, கோ.புண்ணியவான், முனைவர் ஆறு.நாகப்பன், வ.முனியன் போன்ற நமது நாட்டு எழுத்தாளர்களும் பயிலரங்கை வழிநடத்தினர். மூன்று நாட்கள் நடைபெற்ற இப்பயிலரங்கு பயன்மிகு நிகழ்ச்சியாக அமைந்தது.